சுதந்திர இந்தியாவில் 71 ஆண்டுகளாக மின்சார வசதியே இல்லாமல் நாட்களை கழித்த கிராம மக்கள்
சுதந்திர இந்தியாவில் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் 71 ஆண்டுகளாக மின்சார வசதியே இல்லாமல் அந்த கிராம மக்கள் நாட்களை கழித்துள்ளனர்.
சட்டீஸ்கர்,
சட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் ஜோகாபாத் என்ற மலை கிராமம் உள்ளது. இது சுற்றிலும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. கடந்த 71 ஆண்டுகளாக மின்சார வசதியே இல்லாமல் தங்கள் நாட்களை இந்த கிராம மக்கள் கழித்துள்ளனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தெருக்கள் மற்றும் வீடுகளில் மின் விளக்குகள் எரிவதை கண்ட கிராமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,
தற்போது எங்கள் கிராமத்திற்கு மின்சாரம் கிடைத்துள்ளது. நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். இனிமேல் எங்கள் குழந்தைகள் எந்த சிரமும் இன்றி படித்து வாழ்கையில் முன்னேற்றம் அடைவார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story