காபி தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசம்; கிராம மக்கள் பீதி


காபி தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசம்;  கிராம மக்கள் பீதி
x
தினத்தந்தி 28 Sept 2022 12:30 AM IST (Updated: 28 Sept 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஆலூர் அருகே காபி தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசம் செய்துள்ளது. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

ஹாசன்;


ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா கித்தகளலா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் கிராமத்திற்குள் இரைதேடி காட்டுயானை, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் அவை அருகே உள்ள தோட்டத்திற்குள் நுைழத்து காபி, பாக்கு போன்ற பயிர்களை நாசம் செய்துவிட்டு செல்கின்றன.

இந்நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டுயானைகள் கித்தகளலா கிராமத்தின் அருகே உள்ள காபி தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த காபி செடிகளை மிதித்தும், தும்பிக்கையால் பிடுங்கி எறிந்தும் அட்டகாசம் செய்தது. அப்போது காபி தோட்டத்திற்கு சென்ற கூலி தொழிலாளிகள் காட்டுயானைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் இதுகுறித்து கிராம மக்களுக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த வனத்துறையினர், காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.


Next Story