பெங்களூருவில் விபத்தில் படுகாயம் அடைந்த முதியவருக்கு இழப்பீட்டு தொகை ரூ.15½ லட்சமாக உயர்வு; கா்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


பெங்களூருவில் விபத்தில் படுகாயம் அடைந்த முதியவருக்கு இழப்பீட்டு தொகை ரூ.15½ லட்சமாக உயர்வு; கா்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

பெங்களூருவில் விபத்தில் படுகாயம் அடைந்த முதியவருக்கு இழப்பீட்டு தொகை ரூ.15½ லட்சமாக உயர்த்தி கா்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு மாரத்தஹள்ளியை சேர்ந்தவர் முனியப்பா (வயது 72). கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சென்ற முனியப்பா மீது ஒரு பெட்ரோல் டேங்கர் லாரி மோதி இருந்தது. இந்த விபத்தில் தலையில் பலத்தகாயம் அடைந்திருந்த அவர், ஒரு மாத சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்திருந்தார். ஆனால் அவரது கை, கால்களில் பலத்தகாயம் அடைந்திருந்ததால், எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் போனது.

இதையடுத்து, இழப்பீடு கேட்டு பெங்களூரு மோட்டார் வாகன கோாட்டில் முனியப்பா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு கடந்த ஆண்டு, முனியப்பாவுக்கு ரூ.8 லட்சத்து 44 ஆயிரம் நிவாரணம் வழங்கும்படி கோரி, டேங்கர் லாரி உரிமையாளரான பெங்களூரு புறநகர் மாவட்டம் நந்தகுடியை சேர்ந்த சிவண்ணாவுக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் தனக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் முனியப்பா சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, முனியப்பாவுக்கு வழங்கப்பட்ட இழப்பீடை இரட்டிப்பாக அதாவது, ரூ.15 லட்சத்து 67 ஆயித்து 500 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Next Story