திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் ரூ.120 கோடி உண்டியல் வருமானம்
நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3.62 கோடி கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 22 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆகஸ்டு மாத உண்டியல் வருமானமாக ரூ.120 கோடியே 5 லட்சம் கிடைத்தது. 1 கோடியே 9 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 43 லட்சத்து 7 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் சாப்பிட்டுள்ளனர். 9 லட்சத்து 7 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 193 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 28 ஆயிரத்து 750 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 62 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story