தாசில்தார் அலுவலகத்தில் அரசு பணம் கையாடல்
என்.ஆர்.புரா தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ்கள் வழங்கும் பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிவர், போலி ரசீதுகள் கொடுத்து முறைகேடு செய்தது மட்டுமல்லாமல், அரசு பணத்தையும் கையாடல் செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
சிக்கமகளூரு:
ஒப்பந்த ஊழியர்
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா அலுவலகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட அரசு சான்றிதழ்கள் வழங்கும் கணினி பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக முஜாஹிதீன்(வயது 40) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அரசு சான்றிதழ்கள் வழங்க பொதுமக்களிடம் இருந்து கட்டணம் வசூலித்து, அவற்றுக்கு போலி ரசீதுகள் தயாரித்து மோசடி செய்ததாகவும், அரசிடம் சரியாக கணக்குகளை ஒப்படைக்காமல் பணத்தை கையாடல் செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இதுபற்றி என்.ஆர்.புரா துணை தாசில்தார் மல்லிகார்ஜூனுக்கும் புகார்கள் சென்றன. அதன்பேரில் இதுபற்றி அவர் விசாரணை நடத்தினார். அப்போது முஜாஹிதீன் முறைகேடு செய்ததும், பணத்தை கையாடல் செய்ததும் தெரியவந்தது.
கைது
இதையடுத்து இதுபற்றி என்.ஆர்.புரா போலீசில் துணை தாசில்தார் மல்லிகார்ஜூன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து முஜாஹிதீனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story