செங்கம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
செங்கம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் அருகே உள்ள நரிக்குறவர் காலனியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் வீடு கட்ட பணி ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் வீடு கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் செங்கம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். நரிக்குறவர் காலனியில் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது நரிக்குறவர் இன மக்கள் வீடு கட்டும் பணி தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் மீது புகார் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் முருகேஷ், ஒப்பந்ததாரர்கள் பணிகளை வேகமாக முடித்து ஒப்படைக்க வேண்டும் என கூறினார். ஆய்வின் போது செங்கம் பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா, செயல் அலுவலர் உமாமகேஸ்வரி, கவுன்சிலர் வேலு உள்பட பலர் உடனிருந்தனர்.
இதனையடுத்து கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story