கலசபாக்கம் அருகே மழையால் சேதமடைந்த நெற் பயிர்களை அதிகாரிகள் ஆய்வு


கலசபாக்கம் அருகே மழையால் சேதமடைந்த நெற் பயிர்களை  அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2022 9:24 PM IST (Updated: 18 May 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அருகே மழையால் சேதமடைந்த நெற் பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கலசபாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 101 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தன. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. 

இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் கலசபாக்கம் வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் உரிய நிவாரணம் வழங்க கோரியும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதைத் தொடர்ந்து கலசபாக்கத்தை அடுத்த பில்லூர் பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் லட்சுமிநரசிம்மன் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் நேரில் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அப்போது கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வேலு, வேளாண் துறை அலுவலர் பழனி உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story