தனியார் வேலைவாய்ப்பு முகாம்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்


தனியார் வேலைவாய்ப்பு முகாம்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 March 2022 8:19 PM IST (Updated: 6 March 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. இந்த முகாம் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை தொழிற்சாலைகள் கலந்து கொள்ள உள்ளன. 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.


Next Story