அகஸ்தீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம்


அகஸ்தீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2022 11:19 PM IST (Updated: 15 Feb 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

நாகை வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வெளிப்பாளையம்:
நாகை வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம்
நாகை வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசிமக திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து 11-ந் தேதி வசந்தன் உற்சவமும், 13-ந் தேதி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடந்தது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அகஸ்தீஸ்வரர் தேரில் எழுந்தருளினார்.
தீர்த்தவாரி
பின்னர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நிலையை அடைந்தது.
 இன்று (புதன்கிழமை) கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும்,  18-ந்தி தேதி புஷ்ப பல்லாக்கும், 19-ந் தேதி தெப்ப உற்சவமும், 21-ந் தேதி திருக்கல்யாணமும், 22-ந் தேதி அன்னபாவாடை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

Next Story