விக்கிரமசிங்கபுரம் அருகே வயலில் புகுந்து யானைகள் அட்டகாசம்


விக்கிரமசிங்கபுரம் அருகே வயலில் புகுந்து யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 2 Jan 2022 1:50 AM IST (Updated: 2 Jan 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

வயலில் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.

விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் டாணாவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது வயல் அனவன்குடியிருப்பில் உள்ளது. அங்கு நெல் பயிரிட்டு உள்ளார். நேற்று அதிகாலை பாபநாசம் மேற்கு மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து வந்த 3 யானைகள் அந்த வயலில் புகுந்து அட்டகாசம் செய்தன. இதில் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து வெங்கடேஷ் பாபநாசம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

Next Story