பொங்கல் பரிசுத்தொகுப்பு 4-ந்தேதி முதல் வினியோகம்


பொங்கல் பரிசுத்தொகுப்பு 4-ந்தேதி முதல் வினியோகம்
x
தினத்தந்தி 31 Dec 2021 8:43 PM IST (Updated: 31 Dec 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வருகிற 4-ந்தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.

தேனி: 

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டு தாரர்களுக்கு 20 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தது. தேனி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 20 ஆயிரத்து 897 பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. தாலுகா வாரியாக தேனியில் 64 ஆயிரத்து 115 பேர், ஆண்டிப்பட்டியில் 78 ஆயிரத்து 891 பேர், போடியில் 63 ஆயிரத்து 334 பேர், பெரியகுளத்தில் 71 ஆயிரத்து 205 பேர், உத்தமபாளையத்தில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 352 பேர் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வருகிற 4-ந்தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும். அதற்கு ஏற்ப ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்யும் பணிகள் நடக்கின்றன. எனவே, இவற்றை வாங்குவதற்கு ரேஷன் கடைகளுக்கு வரும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story