பழமையான பாசன வாய்க்கால் பாலம் இடிந்து விழுந்தது
லாலாபேட்டை அருகே பழமையான பாசன வாய்க்கால் பாலம் இடிந்து விழுந்தது
லாலாபேட்டை
கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த பிள்ளபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வல்லம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் தண்ணீர் மூலம் இப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையிலும், விவசாயிகள் வயல்களுக்கு செல்லும் வகையிலும் வல்லம் பகுதியில் வாய்க்காலின் குறுக்கே சிறிய அளவிலான பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக விளை நிலங்களுக்கு உரம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல,அறுவடை செய்யப்பட்ட நெல், வாழை உள்ளிட்ட பொருட்களும் இந்த பாலத்தின் வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது.
இடிந்து விழுந்தது
இவ்வாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயன் அளித்து வந்த இந்த பழமையான பாலத்தின் ஒரு பகுதி திடீெரன இடிந்து விழுந்தது. இதனால், பாலத்தை பயன்படுத்த முடியாத பொதுமக்கள் 2 கிலோமீட்டர் சுற்றி தான் தங்களது விவசாய நிலத்திற்கு சென்று வருகின்றனர். இதேபோன்று பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பாலத்தை முழுமையாக இடித்து விட்டு தற்காலிகமாக வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். அந்த வழியாக பொதுமக்கள் சென்று வந்தாலும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் தற்போதைய நிலையில் வாய்க்காலில் தண்ணீா் வந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இந்தநிலையில் இடிந்த பாலத்திற்கு பதிலாக புதிதாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

Related Tags :
Next Story