கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பில், 32-வது சாலை பாதுகாப்பு மாத விழா பிப்ரவரி 17-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று டவுன் போலீஸ் நிலையம் மற்றும் வட்டார போக்குவரத்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்புசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் போலீசார், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வாகன விற்பனை நிலையத்தினர், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்தவாறு பங்கேற்றனர்.
இந்த ஊர்வலம் கிருஷ்ணகிரி நகரில் முக்கிய வீதிகள் வழியாக சென்று சென்னை சாலையை அடைந்தது. அங்கு கே.ஆர்.சி. மண்டபத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story