வானவில் : குழந்தைகளுக்கான சாம்சங் டேப்லெட்


வானவில் : குழந்தைகளுக்கான சாம்சங் டேப்லெட்
x
தினத்தந்தி 23 Oct 2019 10:09 AM GMT (Updated: 23 Oct 2019 10:09 AM GMT)

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கொரிய நிறுவனமான சாம்சங், தற்போது குழந்தைகளுக்கான டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. ‘கேலக்ஸி டேப் எ கிட்ஸ் எடிஷன்’ என்ற பெயரில் இவை வெளிவந்துள்ளன.

சிறுவர்கள் கையாளும் வகையில் இதன் பிரேம்கள் மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்வி சார்ந்த வீடியோ கேம்கள், புத்தகங்கள் ஆகியன இதில் உள்ளன. 3 வயது முதல் 12 வயது வரையிலானவர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் இந்த டேப்லெட்டில் உள்ளது.

சிறுவர்கள் அதிகம் விரும்பும் சீசேம் ஸ்ட்ரீட், ட்ரீம் வொர்க்ஸ், பி.எஸ்.பி. கிட்ஸ், நேஷனல் ஜியோகிராபிக் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம்தான் டேப்லெட்டை பயன்படுத்த முடியும் என்பதற்கான லாக்கிங் வசதியும் இதில் உள்ளது. 8 அங்குல திரை கொண்ட இந்த டேப்லெட்டில் ஸ்நாப்டிராகன் 429 பிராசஸர் உள்ளது. 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்டது.

மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் இதன் திறனை நீட்டிக்கலாம். இதில் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்பகுதியில் 2 மெகாபிக்ஸெல் கேமராவும் உள்ளன. இதனால் வீடியோ அழைப்புகளை எளிதாக மேற்கொள்ள முடியும். ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஆடியோ ஜாக் இவற்றோடு நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 5, 100 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ளது. குழந்தைகளைக் கவர்வதற்கு வசதியாக நான்கு வண்ணங்களில் வெளிவந்துள்ள இதன் விலை சுமார் ரூ.10,800.

Next Story