மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் தந்தை கைது


மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் தந்தை கைது
x
தினத்தந்தி 11 Jun 2019 4:15 AM IST (Updated: 11 Jun 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் பெற்ற மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ஆனைமலை,

ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது46). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். 14 வயதே ஆன இவரது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவி ஆனைமலை போலீஸ் ஸ்டே‌‌ஷனுக்கு வந்து, தன்னை தனது தந்தை பாலியல் பலாத்காரம் செய்வதாக அழுதபடி புகார் அளித்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது தந்தை கணேசனை பிடித்து விசாரித்தனர். 

இதில் அவர் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்து மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கூலித்தொழிலாளியான கணேசனுக்கு புகை, மது என எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் பெண்கள் வி‌‌ஷயத்தில் அவர் மோசமாக நடந்து கொண்டுள்ளார். இதில் பெற்ற மகள் என்றும் பாராமல் அவர் தனது மகளையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் உன்னையும், அம்மாவையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தனது மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

அந்த மாணவியோ தனது தாய், பள்ளியின் ஆசிரியர்கள் ஆகியோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். ஆனால் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இந்தநிலையில்தான் அந்த மாணவி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி அவரது தந்தை கணேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தோம். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி கணேசன் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றார்.

Next Story