கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்


கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 15 July 2018 3:45 AM IST (Updated: 15 July 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கண்டமங்கலம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால் மருதூர் லெனின் நகர் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது.இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.இந்த நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் திடீரென காலிகுடங்களுடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். பழுதடைந்த மோட்டாரை விரைவில் சரி செய்து தருவதாகவும், அப்பகுதியில் புதிய போர்வெல் அமைத்து தருவதாகவும் உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story