மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,
மாணவர்களின் கல்விக்கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கர் வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூர் காந்தி சிலை முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் வக்கீல் ஸ்டாலின் தலைமை தாங்கினார். காமராசு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் தமிழ்ச்செல்வன், செந்தில்நாதன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு, நகர தலைவர் அக்ரிஆறுமுகம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் துரைராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story