பெரம்பலூர் மாவட்டத்தில் கொட்டரை நீர்த்தேக்கத்துக்கு நிலம் கொடுத்த 300 பேருக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளது

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கொட்டரை நீர்த்தேக்கத்துக்கு நிலம் கொடுத்த 300 பேருக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கூறினார்.
மனுநீதி நிறைவு நாள் விழா
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா நடந்தது. ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமை தாங்கி 613 பயனாளிகளுக்கு ரூ.4¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசால் கொட்டரை கிராமத்தில் ரூ.108 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் புதிய நீர்த்தேக்க திட்டம் 1159.93 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் 893.39 ஏக்கர் பட்டா நிலங்களாகும், 266.54 ஏக்கர் நிலங்கள் கோவில் மற்றும் புறம்போக்கு நிலங்களாகும்.
கொட்டரை நீர்த்தேக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்கள் முன்வந்து தங்களின் பட்டா நிலங்களை அளித்தது மிகவும் பாராட்டுக்குரியது. தொடர்ந்து கால்வாய்கள் அமைப்பதற்கான நிலங்கள் கையப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
300 பேருக்கு வீட்டுமனை
நீர்்த்தேக்கத்திற்கான பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும். மேலும், இத்திட்டத்திற்காக நிலம் கொடுத்த செங்குணத்தை சேர்ந்த 300 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 1 மாத காலமாக இக்கிராமத்திற்கு வருகை தந்து மக்களிடமிருந்து பல்வேறு வகையான கோரிக்கைகள் அடங்கிய 644 மனுக்கள் பெறப்பட்டு தகுதியுள்ள 74 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகின்றன. மனு அளித்த அனைவருக்கும் ஒரு மாத காலத்திற்குள் தக்க பதில் தொடர்புடைய அலுவலகம் மூலமாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பேபி, தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) புஷ்பவதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூர்த்தி, வட்டாட்சியர்கள் சீனிவாசன், ஷாஜஹான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story