ஐபிஎல் கிரிக்கெட் : பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு


Image Courtesy : Twitter / @IPL
x
Image Courtesy : Twitter / @IPL
தினத்தந்தி 17 April 2022 3:07 PM IST (Updated: 17 April 2022 3:07 PM IST)
t-max-icont-min-icon

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் அணி 3 வெற்றி (பெங்களூரு, சென்னை, மும்பை அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (கொல்கத்தா, குஜராத் அணிகளிடம்) 6 புள்ளிகள் பெற்றுள்ளது. 

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் முதல் இரு ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோ அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு சென்னை, குஜராத், கொல்கத்தா அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி எழுச்சி கண்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டு அணிகளும் தற்போது களம் காண்கின்றன. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்றுள்ள ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி அணி முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

Next Story