ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா,
கொல்கத்தாவில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 35-வது லீக் போட்டி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பெங்களூர் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வி என்று 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
பெங்களூர் அணி 8 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 7–ல் தோல்வியும் கண்டுள்ளது.
ஏற்கனவே இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்த போதிலும் அதை கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் விரட்டிப்பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story