தளபதி 67 பூஜை எப்போது..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் பூஜை வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் 'விக்ரம்' படத்தை போன்றே தளபதி 67-ம் புரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் நடிக்க நடிகர் கார்த்திக்கை படக்குழு அணுகியதாகவும் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.