ஜிவி பிரகாஷுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்


ஜிவி பிரகாஷுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்
x

இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஃபேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை திரைப்பிரபலங்கள் பலரும் வெளியிட்டுள்ளனர். டியர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story