டி.இமான் அவருடைய முன்னாள் மனைவி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்


டி.இமான் அவருடைய முன்னாள் மனைவி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்
x
தினத்தந்தி 5 April 2022 11:41 PM IST (Updated: 5 April 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

சமீபத்தில் மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் அவருடைய முன்னாள் மனைவி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.

2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், டி.இமான் அவருடைய முன்னாள் மனைவி மோனிகா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக இமான் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனது இரண்டு மகள்களுடைய பாஸ்போர்டுகள் தன்னிடம் இருக்கிறது. ஆனால் மோனிகா அதை மறைத்து முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா இருவரும் இது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story