நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் வெளியானது...!


நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் வெளியானது...!
x
தினத்தந்தி 9 Jun 2022 8:41 AM IST (Updated: 9 Jun 2022 6:42 PM IST)
t-max-icont-min-icon

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் வெளியானது


Live Updates

  • 9 Jun 2022 10:02 AM IST

    நடிகர் விஜய்சேதுபதி குடும்பத்தினருடன் வந்தார்.   இயக்குநர் அட்லி, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் கார்த்தி, பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் வருகை தந்து உள்ளனர்.

  • 9 Jun 2022 9:57 AM IST

    குவிந்த பிரபலங்கள்..! பலத்த பாதுகாப்புடன் கலைக்கட்டிய விக்னேஷ் சிவன், நயந்தார திருமண நிகழ்ச்சி.

  • 9 Jun 2022 9:45 AM IST

     நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு 

  • 9 Jun 2022 9:33 AM IST

    திருமணத்திற்கு வருகை தருபவர்கள் அழைப்பிதழ் வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

  • 9 Jun 2022 9:23 AM IST

    திருமணம் நடைபெறும் கடற்கரை விடுதியின் முன்புறம், கடற்கரைப் பகுதி என அனைத்து இடத்திலும் 80க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

  • 9 Jun 2022 9:19 AM IST

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி தொடங்கியது. 

  • 9 Jun 2022 9:07 AM IST

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் திருமண நிகழ்வு ,ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸ்-ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது

  • 9 Jun 2022 8:54 AM IST

    சென்னை,

    நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண மண்டபத்தை நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் இன்று நடக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக விக்னேஷ் சிவன் அறிவித்து உள்ளார்.

    இது குறித்து விக்னேஷ் சிவன் கூறி உள்ளதாவது:- தொழில் ரீதியாக உங்கள் ஆசிர்வாதம் எனக்கு எப்படி இருந்ததோ, அதுபோலவே எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அந்த ஆசீர்வாதங்கள் தேவை. எனது தனிப்பட்ட வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன். ஜூன் 9 ஆம் தேதி, என் காதலியை திருமணம் செய்து கொள்கிறேன். நயன்தாரா, குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் திருமணம் நட்க்கிரது. முதலில், திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டோம், ஆனால் சில பிரச்சனைகளால் நடக்கவில்லை. எங்கள் திருமண புகைப்படங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். ஜூன் 11 மதியம், நானும் நயன்தாராவும் உங்களை (ஊடகங்களை) சந்திப்போம், நாம் ஒன்றாக மதிய உணவு சாப்பிடுவோம் என கூறி உள்ளார்.

    நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள் திருமண இடத்திற்கு வெளியே பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது . முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்றும், அது இல்லாமல் அரங்கிற்குள் நுழைய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற உள்ளது.

    வங்காள விரிகுடாவை பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்ட பிரத்யேக பின்னணியில் இந்து முறைப்படி விழா நடைபெறவுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, சூர்யா, அஜித், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சமந்தா ரூத் பிரபு ஆகிய இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய பெயர்கள் இந்த விருந்தினர் பட்டியலில் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த திருமண விழாவை இயக்குனர் கவுதம் மேனன் திருமண விழாவை இயக்குவார், இது ஆவணப்படமாக தயாரிக்கப்படுகிறது. பின்னர் ஒடிடி தளத்திற்கு விற்கப்படும். பெரும் விலைக்கு. திருமண ஆவணப்படம் நெட்ஃபிக்ஸ் இல் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.


Related Tags :
Next Story