பிரபல நடிகருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை


பிரபல நடிகருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 20 April 2022 4:24 PM IST (Updated: 20 April 2022 4:24 PM IST)
t-max-icont-min-icon

பிரபல இந்தி நடிகர் ரஜத் ரவைல் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பிரபல இந்தி நடிகர் ரஜத் ரவைல். இவர் சல்மான்கானின் பாடிகார்ட் படத்தில் நடித்து பிரபலமானார். ஜூத்வா-2, போலீஸ் கிரி, கூலி நம்பர்-1 உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

டில் நே பிர் யாத் கியா, ஜமீர் உள்ளிட்ட படங்களை டைரக்டும் செய்துள்ளார். ரஜத் ரவைலுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது வலது காலின் ரத்த குழாயிலும் பாதிப்பு உருவாகி ரத்த கசிவு ஏற்பட்டது.

இதையடுத்து, மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜத் ரவைல் வெளியிட்டுள்ள வீடியோவில், “கால் நரம்பு ரத்த கசிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

Next Story